போர்க்களமா வாழ்க்கை – தன்னம்பிக்கை கவிதை

போர்க்களமா வாழ்க்கை – தன்னம்பிக்கை கவிதை

போர்க்களமா வாழ்க்கை?
பார்க்கலாமே ஒரு கை! சோர்ந்து விடாதே!
இதுதானா வாழ்க்கை என்று
கோழைகளின் பட்டியலில்
சேர்ந்து விடாதே!
இல்லையென்பார்,
இருப்பதைக் கொடுப்பாய்;
இன்னமும் என்பார்
இதுதான் முடியும் என்பாய்!
மறுகணமே
கஞ்சப் பிரபு என
புறம் கூற புரண்டு நிற்கும்
பஞ்சப் பிரபுவின் நாக்கு!
கொடுத்ததை
திரும்பக் கேட்டால்
கோமாளி என்பான்;
இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ
ஏமாளி என்பான்!
நாம் இழைக்கும்
தவறுகளிலே
கதைப் பேசி
பிழைக்கும் கூட்டங்கள்
இந்த
நயவஞ்சக நாக்கினைக் கண்டு;
கதற வேண்டாம் -உன்மனம்
பதற வேண்டாம்!
வீணாய்
ஒலித்துக்கொண்டிருக்கும்
ஓநாய்களின்
ஒப்பாரி சத்தமிது..
தானாய்
குறைந்து விடும்;
ஒரு நாள் காணாமலே
கறைந்து விடும்!
கருணையற்ற கூட்டம்
காணும்படி,
கண்ணீரை மட்டும்
சிந்தி விடாதே!
இவர்கள் -உன்
விழி நீரிலே விளையாடும்
விந்தை மனிதர்கள் -உன்
கண்ணீரிலே கவிபாடும்
கந்தை மனிதர்கள்!
வில்லில் பூட்டின
அம்புக்கும்,
அவர்கள் நாவிலே
பிறக்கும் வார்த்தைகளுக்கும்,
அதிக வித்தியாசமில்லை!
இரண்டுமே
காயப்படுத்திவிட தயாராய்;
அம்பின் கூர்மையும்
மழுங்கி விடலாம்;
வம்பளக்கும் அவர்களின்
நாவுகளோ ஒருநாளும்
மழுங்கி விடாது!
புறம் கூறிடும்
வஞ்சக கூட்டத்தின்;
நிறம் மாறிடும் நாட்கள்
வெகு தொலைவில்
அல்ல தோழா! நன்றி கெட்ட
மனிதனின் நாக்கு;
அப்படி இப்படி
புரளத்தான் செய்யும்!
அவனுக்கும்
ஒரு கூட்டம்;
எப்படி எப்படியோ
திரளத்தான் செய்யும்!
போகட்டும்
அவர்களிடம் இல்லாத,
ஆனால் உன்னிடம் இருக்கும்
ஒரே ஆயுதம் மன்னிப்பு!
இவர்களைப் பற்றி
இனி மனதிலே
சிந்திக்கவும் வேண்டாம்!
மறந்தும் கூட
நிந்திக்கவும் வேண்டாம்!
காலம் கண் போன்றது!
கவனித்துக்கொண்டே இருக்கிறது!!

Comments

  1. படிக்கிறபோது அட நல்லாருக்கே இந்த கவிதை அப்படின்னு மனசுக்கு தோணுச்சுனா, உடனே அதை காப்பி பேஸ்ட் செய்து உங்க தளத்தில போடுங்க... கூடவே அதை எழுதியவரின் பெயரையும் போடுங்க...

    இல்லைன்னா உங்களுக்கும் திருடனுக்கும் அதிக வித்தியாசமில்லை

    கவிதைகளை திருடாதீர்கள்

    http://nisiyas.blogspot.in/2009/03/blog-post_13.html

    ReplyDelete
    Replies
    1. ok intha kavithai vivegananthar puthagathilirunthu yeduggappattathau.

      Delete

Post a Comment

Popular posts from this blog