Popular posts from this blog
போர்க்களமா வாழ்க்கை – தன்னம்பிக்கை கவிதை
போர்க்களமா வாழ்க்கை – தன்னம்பிக்கை கவிதை போர்க்களமா வாழ்க்கை? பார்க்கலாமே ஒரு கை! சோர்ந்து விடாதே! இதுதானா வாழ்க்கை என்று கோழைகளின் பட்டியலில் சேர்ந்து விடாதே! இல்லையென்பார், இருப்பதைக் கொடுப்பாய்; இன்னமும் என்பார் இதுதான் முடியும் என்பாய்! மறுகணமே கஞ்சப் பிரபு என புறம் கூற புரண்டு நிற்கும் பஞ்சப் பிரபுவின் நாக்கு! கொடுத்ததை திரும்பக் கேட்டால் கோமாளி என்பான்; இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ ஏமாளி என்பான்! நாம் இழைக்கும் தவறுகளிலே கதைப் பேசி பிழைக்கும் கூட்டங்கள் இந்த நயவஞ்சக நாக்கினைக் கண்டு; கதற வேண்டாம் -உன்மனம் பதற வேண்டாம்! வீணாய் ஒலித்துக்கொண்டிருக்கும் ஓநாய்களின் ஒப்பாரி சத்தமிது.. தானாய் குறைந்து விடும்; ஒரு நாள் காணாமலே கறைந்து விடும்! கருணையற்ற கூட்டம் காணும்படி, கண்ணீரை மட்டும் சிந்தி விடாதே! இவர்கள் -உன் விழி நீரிலே விளையாடும் விந்தை மனிதர்கள் -உன் கண்ணீரிலே கவிபாடும் கந்தை மனிதர்கள்! வில்லில் பூட்டின அம்புக்கும், அவர்கள் நாவிலே பிறக்கும் வார்த்தைகளுக்கும், அதிக வித்தியாசமில்லை! இரண்டுமே காயப்படுத்திவிட தயாராய்; அம்பின் கூர...
Comments
Post a Comment